Tuesday, August 25, 2009

பகட்டை விரும்பும் இரட்சணிய சேனை(யர்கள்)

இல்லாதிருப்போருக்கு இரங்கி
இறைப்பணி செய்வதற்காக
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட
இரட்சணிய சேனையின்-பணி
இன்று இந்தியாவில்
இதயமற்று இருப்பது
இதயத்தை கனக்கச் செய்கிறது.

இரு வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் புகழ்பெற்ற சபை/படைஸ்தலம்/மண்டபம்/தேவாலயம்!? ஒன்றில் ஆராதனையினிடையே நிகழ்ந்த சம்பவம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

உலகில் பிரச்சினை இல்லாத இடம் தான் எங்கிருக்கிறது. பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்த்திருக்கலாம்.இருதரப்பினரும் சரியான ஒரு முடிவிற்கு வராமல் இருப்பது தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தான் இடமளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்று பதவி, புகழ், பகட்டு இவற்றை குறிவைத்து இயங்கும் சிலராலும் நான் என்ற அகங்காரமும், சரியான தலைமையும், வழிநடத்துதல் இல்லாமையும் தான் இதுபோன்ற தர்மசங்கடமான நிலைகளை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

இது ஒருபுறமிருக்க ஆராதனை நடைபெறும் இடங்கள் இன்று தேவைக்கு மிஞ்சிய அலங்காரங்களாலும், ஆக்கிரமிப்புகளினாலும் அலங்கோலப்படுத்தப்படுகின்றன.இயற்கையை மாய்த்து செயற்கையை ஏற்படுத்துவதோடு அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள்.

குறிப்பாக பாளையில் மணிக்கூண்டு வைக்க வேண்டுமென்பதற்காக உயிராய் இருந்த பல மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல கிராமங்களிலும், வட இந்தியாவிலும் ஆராதனைக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாதிருக்கையில் இங்கோ பல லட்சங்கள் செலவில் இவர்களுக்கு மணிக்கூண்டு என்ன தேவைக்கோ தெரியவில்லை.

இறைவன் பெயரில்
இறைப்பணி நடக்கின்றதோ இல்லையோ
இங்கு-பகட்டான பிற பணிகள்
இலகுவாக நடக்கின்றன

2 comments:

babe said...

ஒரு மரம் வளர்ப்பது எவ்வளவு கடினம் ......அத்தை வெட்டுவது சுலபம் ..ஏன் இந்த பழக்கம் என்று தெரியவில்லை ..உலகம் முழுவது வெப்பமயம் ஆகுதல் காரணமாக எல்லோரும் மரம் வளர்க்கவேண்டும் என்று ஊர் ஊராக விளம்பரம் செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு அவலம் ....ஏன் ஆலயத்தின் பின் அந்த மணிக்கூண்டை கட்டினால் என்ன இதை கேட்க யாரும் இல்லையா ?? இங்கு இந்த இங்கிலாந்து தேசத்தில் இருந்து மக்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு நம் நாட்டுக்கு உதவி செய்கின்றார்கள் ஏன் நம் மக்கள் இன்னும் புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள் இதை பார்க்கும் பொது மிகவும் வேதனையாக உள்ளது ..இப்படி மணிக்கூண்டு க்கு செலவு பண்ணுவது நம் மக்கள் எத்தனை பேர் மேற்ப்படிப்புக்கு பணம் இல்லாமல் உதவி செய்ய ஆள் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவலாமே .....இது எல்லாம் ஏன் இந்த மக்களுக்கு தெரியவில்லை ,ஆலயத்தில் சண்டை எங்கு பிரச்னை தொலைக்காட்சி பார்த்தால் நெடுந்தொடர் முலம் சந்தோசமாக இருக்கும் மக்களையும் அழவைக்கும் நிகழ்ச்சி நிமதி தேடி ஆலயம் சென்றால் இப்படி ...என்ன கொடுமை சார் இது ...அதுவும் ஓய்வு பெற்ற ஊழியர் பிள்ளைகள் மிகவும் வேதனைப்படும் விஷயம் ,இந்த நிகழ்ச்சி அவர்கள் பெற்றோருக்கு நடந்தால் எப்படி இருந்திருக்கும் இதை எல்லாம் நினைப்பது ,இல்லை ...வேதனை, வெட்க்கம் ,கேவலம், வேறு எனக்கு வார்த்தை தெரியவில்லை அவர்களை பற்றி கூற அவர்களுக்காக வருந்துகிறேன் ....

Unknown said...

APPRECIATING YOUR BTH ISSUES

IT IS APPRECIABLE IF U ADD ON THE TSUNAMI ISSUES- REGARDING CBH FUNDS ALSO

IF YOU NEED MORE OF OUR OWN BLOOD-Y SALVATIONISTS KEEP MAILING ME

karanmaali@yahoo.com