Wednesday, August 19, 2015

இன்றைய கிறிஸ்தவம் - சில புரிதல்கள்

இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களோடு அளவளாவவும் இன்று பெரும்பாலான சபைகளுக்கும், போதகர்களுக்கும் நேரமில்லாதிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆராதனை Worship என்பதன் பெயரில் சில பாடல்களுக்கு துள்ளிக்குதித்தால் இறைவன் இறங்கி வந்து விடுவார் என்று நம்ப வைக்கப்படுகின்றனர்.

இளைஞர்களின் பரவலான மனமுறிவுகளுக்கு, தோல்வியே பெருங்காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. தேர்வுகளிலும், பணியிடங்களிலும், உறவுகளிக்கிடையேயான புரிதலிலும் தோற்றுப் போகிறவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பது இன்று மிகச்சாதாரணமாகி விட்டது.

இத்தகைய தோல்விகளைக் கையாளப் போதுமான வழிகாட்டுதலே தேவையன்றி, தேர்வுகளுக்கான மூன்று நாள் உபவாச ஜெப கூட்டமும், சிறப்பு விண்ணப்ப ஏற்பாடுகளும் அல்ல.

ஜெபம் என்றாலே ஜெபம் தான், நாம் விசுவாசித்துக் கேட்பதை கடவுள் தருவார் என்ற நம்பிக்கையில் ஜெபிக்கிறோம்.  இதில் சிறப்பு /ஸ்பெசல் ஜெபம் எதற்கு?! இது போன்ற Prefix Suffix களால் தான் இன்று கிறிஸ்தவ வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

வேதாகமத்தை முறையாக வாசித்தறிந்தவர்கள் கிறிஸ்தவ வியாபாரிகளின் வலைவீச்சிற்கு தப்பித்துக் கொள்கிறார்கள். வேதாகமத்தை வாசிக்காமல் எந்த ஊரில் சிறப்பு/வல்லமை/அற்புத/ கூட்டங்கள் நடந்தாலும் அங்கு செல்பவர்கள் வலையில் விழுந்து போகிறார்கள்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உயர் பதவி வகிக்கும் தமிழர் ஒருவர் சங்கீதம் 24:6, 10 ஐ வாசிக்கையில் வசனத்தோடு சேர்த்து 'சேலா' என்பதையும் வாசித்தார், அவரோடு சேர்ந்து வாசித்தவர்களும் அதையே பின்பற்றினார்கள். சங்கீதம் 24 :10 - யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவரே மகிமையின் ராஜா. (சேலா.)  இத்தனைக்கும் சேலா, அடைப்புக் குறிக்குள் தான் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தான் கிறிஸ்தவ வியாபாரிகளின் இலக்கு.

விரல்நுனிகளில் உலகை வைத்துக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில், வேதாகம சந்தேகங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இதுவறியாமல் நம் ஜனங்கள் கிறிஸ்தவ வியாபாரிகள் கையில் இன்னும் அடங்கிக் கிடப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்த படி.. இயேசுவில் விசுவாசிக்கிறவர்கள், முதலில். அவர் உரைத்த, வெகு எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் மத் 5:3-10 ல் எழுதப்பட்டிருக்கும்  மலைப் பிரசங்கத்தின் எட்டு வசனங்களைப் படித்தறிந்து அவற்றை செயல்படுத்தினாலே இன்றைய காலகட்டத்தின் தவறான போதகங்களுக்கு தங்களை விலக்கி பாதுகாத்துக் கொள்ள முடியும்.


"எளிமை, துயரம் சகித்தல், சாந்தகுணம், நீதியாய் இருத்தல், இரக்கமாயிருத்தல், இருதயத்தில் சுத்தம், சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல்" என்பவை தான் மலைப்பிரசங்கத்தின் சாராம்சம். ஆனால் இன்று இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆசீர்வாதத்திற்கும், வல்லமைக்கும், அற்புதத்திற்கும் அலையும் ஜனக்கூட்டமாக மாறியிருப்பது தான் நவநாகரீக கிறிஸ்தவத்தின் நிலைமை. அதோடு வரதட்சணையையும், நல்ல நாள்களைக் குறித்து வைத்து விழாக்களையும், திருமணங்களையும் நடத்துதலையும் சேர்த்துக் கொள்ளலாம்!!

Thursday, July 9, 2015

150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் The Salvation Army


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும்நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும்மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்துஇந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும்சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ்சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும்உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றிபல தொலைவுகள் கடந்துபசியிலிருப்போர்கைவிடப்பட்டோர்பிச்சைக்காரர்கள்மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும்தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும்இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம்ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம்ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுதுஇந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியாஎன்ற புத்தகத்தில்  இந்தியாபட்டினியினாலும்பஞ்சத்தினாலும்விபச்சாரத்தினாலும்குடி வெறியர்களாலும்சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும்கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.



150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள்நாமும் லண்டன் சென்றோம்சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல்புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.