Wednesday, August 19, 2015

இன்றைய கிறிஸ்தவம் - சில புரிதல்கள்

இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களோடு அளவளாவவும் இன்று பெரும்பாலான சபைகளுக்கும், போதகர்களுக்கும் நேரமில்லாதிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆராதனை Worship என்பதன் பெயரில் சில பாடல்களுக்கு துள்ளிக்குதித்தால் இறைவன் இறங்கி வந்து விடுவார் என்று நம்ப வைக்கப்படுகின்றனர்.

இளைஞர்களின் பரவலான மனமுறிவுகளுக்கு, தோல்வியே பெருங்காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. தேர்வுகளிலும், பணியிடங்களிலும், உறவுகளிக்கிடையேயான புரிதலிலும் தோற்றுப் போகிறவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பது இன்று மிகச்சாதாரணமாகி விட்டது.

இத்தகைய தோல்விகளைக் கையாளப் போதுமான வழிகாட்டுதலே தேவையன்றி, தேர்வுகளுக்கான மூன்று நாள் உபவாச ஜெப கூட்டமும், சிறப்பு விண்ணப்ப ஏற்பாடுகளும் அல்ல.

ஜெபம் என்றாலே ஜெபம் தான், நாம் விசுவாசித்துக் கேட்பதை கடவுள் தருவார் என்ற நம்பிக்கையில் ஜெபிக்கிறோம்.  இதில் சிறப்பு /ஸ்பெசல் ஜெபம் எதற்கு?! இது போன்ற Prefix Suffix களால் தான் இன்று கிறிஸ்தவ வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

வேதாகமத்தை முறையாக வாசித்தறிந்தவர்கள் கிறிஸ்தவ வியாபாரிகளின் வலைவீச்சிற்கு தப்பித்துக் கொள்கிறார்கள். வேதாகமத்தை வாசிக்காமல் எந்த ஊரில் சிறப்பு/வல்லமை/அற்புத/ கூட்டங்கள் நடந்தாலும் அங்கு செல்பவர்கள் வலையில் விழுந்து போகிறார்கள்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உயர் பதவி வகிக்கும் தமிழர் ஒருவர் சங்கீதம் 24:6, 10 ஐ வாசிக்கையில் வசனத்தோடு சேர்த்து 'சேலா' என்பதையும் வாசித்தார், அவரோடு சேர்ந்து வாசித்தவர்களும் அதையே பின்பற்றினார்கள். சங்கீதம் 24 :10 - யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவரே மகிமையின் ராஜா. (சேலா.)  இத்தனைக்கும் சேலா, அடைப்புக் குறிக்குள் தான் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தான் கிறிஸ்தவ வியாபாரிகளின் இலக்கு.

விரல்நுனிகளில் உலகை வைத்துக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில், வேதாகம சந்தேகங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இதுவறியாமல் நம் ஜனங்கள் கிறிஸ்தவ வியாபாரிகள் கையில் இன்னும் அடங்கிக் கிடப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்த படி.. இயேசுவில் விசுவாசிக்கிறவர்கள், முதலில். அவர் உரைத்த, வெகு எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் மத் 5:3-10 ல் எழுதப்பட்டிருக்கும்  மலைப் பிரசங்கத்தின் எட்டு வசனங்களைப் படித்தறிந்து அவற்றை செயல்படுத்தினாலே இன்றைய காலகட்டத்தின் தவறான போதகங்களுக்கு தங்களை விலக்கி பாதுகாத்துக் கொள்ள முடியும்.


"எளிமை, துயரம் சகித்தல், சாந்தகுணம், நீதியாய் இருத்தல், இரக்கமாயிருத்தல், இருதயத்தில் சுத்தம், சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல்" என்பவை தான் மலைப்பிரசங்கத்தின் சாராம்சம். ஆனால் இன்று இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆசீர்வாதத்திற்கும், வல்லமைக்கும், அற்புதத்திற்கும் அலையும் ஜனக்கூட்டமாக மாறியிருப்பது தான் நவநாகரீக கிறிஸ்தவத்தின் நிலைமை. அதோடு வரதட்சணையையும், நல்ல நாள்களைக் குறித்து வைத்து விழாக்களையும், திருமணங்களையும் நடத்துதலையும் சேர்த்துக் கொள்ளலாம்!!

Thursday, July 9, 2015

150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் The Salvation Army


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும்நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும்மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்துஇந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும்சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ்சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும்உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றிபல தொலைவுகள் கடந்துபசியிலிருப்போர்கைவிடப்பட்டோர்பிச்சைக்காரர்கள்மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும்தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும்இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம்ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம்ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுதுஇந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியாஎன்ற புத்தகத்தில்  இந்தியாபட்டினியினாலும்பஞ்சத்தினாலும்விபச்சாரத்தினாலும்குடி வெறியர்களாலும்சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும்கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.



150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள்நாமும் லண்டன் சென்றோம்சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல்புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.

Saturday, December 31, 2011

Salvation Army Tamil Songs

Dear Fellow Tamil Salvationists,

By the Grace of God I could able to complete the SA TAMIL SONGS Online in the blog named http://satamilsongs.blogspot.com/

Access it and spread the Good News.

God Bless U(s)


Friday, December 24, 2010

அன்பின் வாழ்த்துக்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
இவ்வுலகை மீட்கவே
இருளை நம்மில் அகற்ற
நள்ளிரவில் தோன்றினார்

முன்னணை மீதினில்
மரியின் மடியினில்
மனுவான தேவனே-உம்
மகத்துவம் பாடுவோம்

மண்ணில் வேதனை-தினம்
மடியும் மாந்தர்கள்
மாற்ற வேண்டுமே
உம் இரண்டாம் வருகையே

2009 ல் எழுதிய பாடல்

Tuesday, December 14, 2010

பூத் டக்கர் நினைவு ஆலயம்

12.12.2010 அன்று திறக்கப்பட்ட புதிய பூத் டக்கர் நினைவு ஆலயத்தின் புகைப்படங்கள்.


நன்றி: விக்டர் எபநேசர், ஸ்மித் ஐசக், சுந்தர் சிங்

Tuesday, November 30, 2010

என்று மாறுமோ தமிழக இரட்சணிய சேனை!


கடந்த மாதம் அக்டோபரில் தமிழகம் சென்றிருந்த போது இரட்சணிய சேனை பணிகளையும், பல officers களையும் காண நேர்ந்தது. அதிகமாக எந்தவொரு மாற்றத்தையும் பார்க்கமுடியவில்லை. ஆட்களும், ஆலயங்களும் (ஆவிக்குரிய ரீதீயில் இல்லை)வளர்ந்ததைத் தவிர.

தான் தான் உயர்ந்தவன் என்ற கர்வமும், சுயநலம் என்ற வியாதியும், கொள்ளையடித்தலும் இன்னும் தொடரத் தான் செய்கிறது. அனுபவ சாட்சி என்ற பெயரில் இறைவனை முன்னிறுத்தாமல் சுயபுராணம் பாடுவதும் இன்னும் மாறவில்லை.

என்று மாறுமோ தமிழக இரட்சணிய சேனை


Friday, July 23, 2010

உலகம்-வாழ்க்கை-விவிலியம் உண்மையறிந்தவர் யாரோ

இதுவரைக்கும் ஒண்ணுமே புரியல உலகத்தில;இப்பவும் ஒண்ணும் புரியல; இனிமேலும் எதுவும் புரிய வாய்ப்பிருக்கான்னும் தெரியல.

உலகம் உண்டாகியது என்பவர்கள் ஒருபுறம்;இறைவனால் உண்டாக்கப்பட்டது என்பவர்கள் மறுபுறம்.அதே போன்று இறைவன் மனிதனை தோற்றுவித்தான் என்பவர்கள் இருக்கையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி!

இறைவன் படைத்தாலும் இன்றைக்கு இத்தனை மனித இனங்கள், மனித மொழிகள், மனித நிறங்கள், பாகுபாடுகள், வேற்றுமைகள் எப்படி உருவாகின என்பதும் புரியவில்லை!

வானம், பூமி உள்ளிட்ட உலகின் அனைத்தையும் இறைவன் படைத்தார் என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் இரவும் மற்றொரு பகுதியில் பகலும் ஏன் நிலவுகிறது என இன்று வரை புரியவில்லை.அதற்கு ஆதாரமான குறிப்பு ஏதும் விவிலியத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை!

எப்படியோ உலகத்தில் வந்தோம் எப்படியோ போகிறோம். இதனிடையில் குழந்தைப்பருவம்,வாலிபம்,முதுமை என பல பருவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது.

அவற்றோடு வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், ஏமாற்றம், இழப்பு, ஏற்பு, நன்மை, தீமை என பல அனுபவங்களையும் காண வேண்டியுள்ளது.

இதுல பரலோகம் போகணும்னா கிறிஸ்தவத்தில திருமுழுக்கு @ ஞானஸ்நானம் எடுக்கணுமாமே! இல்லன்னா போக முடியாதாம். ஆனா சிலபேர் பரலோகத்துக்கு திருமுழுக்கு எடுத்திட்டு இந்த பூலோகத்தில பண்ற அசிங்கமும் அநியாயமுமிருக்குதே அது கொஞ்சநஞ்சமா!அப்போ இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் பரலோக வாய்ப்பை இழக்கின்றதா! இது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏன் இல்லை!

சாமியார்கள் சொல்றத கேட்டா நல்லது நடக்கும்,மேலோகத்திற்கு போகலாமுன்னு வேற கொஞ்சம் பேர் நம்புறாங்க.ஆனா நம்புற எல்லாருக்கும் நல்லது நடக்கிறது இல்லையே ஏன்!

கேளுங்கள் தரப்படும்ணு விவிலியத்தில சொல்லிருக்கு அதோட... நீ கேக்கிறதுக்கு முன்னமே உனக்கு என்ன தேவை என்ன என்பதை அறிவேன் அப்படின்னும் சொல்லியிருக்கு. கேக்கிறதா வேண்டாமா!

ஒவ்வொருவரின் செயல்களும், உலக நிகழ்வுகளும் இறைவனின் சித்தப்படி அதாவது இறைவன் எது நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அப்படித்தான் நடக்கும் என்கிறது விவிலியம். அப்படியென்றால் ஒருவர் நன்மை செய்ய நினைப்பதும் இன்னொருவர் தீமை செய்ய நினைப்பதும் எல்லாம் இறைவன் செயல் தானா? அப்போ தப்பு செய்றவங்க மேல தப்பில்லையா! (இப்போ நீங்க தலய பிச்சிக்கிறீங்களா? இருங்க இருங்க, கடைசி வர படிச்சிட்டு பிச்சுக்குங்க)

ஒருவரின் (ஆதாமின்) பாவத்தினால் மனித குலமே வெறுக்கப்பட வேண்டுமா? ஆதாமின் பாவமும் இறைவன் அறியாமல் நடந்திருக்காது அல்லவா! இன்று சிசுக்கொலை துவங்கி இனப்படுகொலை வரை, வறுமை துவங்கி பட்டினி வரை மனித குலம் படும் அல்லல்களை காணத்தான் ஆதாமை பாவம் செய்ய அனுமதித்தாரா!

இந்த கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் தவறாமல் காலையில் உதயமாகும் சூரியனும், இரவு பகல் மாறுதலும், மழையும், இயற்கையும் ஏதோ ஒன்றின் அல்லது எவரோ ஒருவரின் (இறைவன்)கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாகத் தான் மனதிற்கு படுகிறது.

இந்த கேள்விகளும், அனுபவமும் அடுத்த நிமிடம் நன்மையோ தீமையோ என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாளை என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலைப்படாமல் "கடவுளை நம்பு கடமையை செய்" என்ற மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியின் கருப்பொருளின் படி தான் இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை... எதுவும் புரியாமல்.

Monday, June 14, 2010

வெள்ளுடையில் சில கருப்பு ஆடுகள்

கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள்ளேயே இன்று பலர் குளிர்காய்ந்து வருவது ஒருபுறமிருந்தாலும். வெள்ளுடை அணிந்த அதன் தலைவர்கள் பலர் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களால் மன்னிக்க முடியாத(ஒருவேளை தெய்வம் மன்னிக்கக்கூடும்!!!) செயல்களைச் செய்வது இன்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக கத்தோலிக்கர்கள் என்றும், கிறிஸ்தவத்தின் தலைமையே நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோமிலும், கனடா மற்றும் அயர்லாந்திலும் கத்தோலிக்க பாதிரியார்கள் நசித்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கைகள் ஏராளம். Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதலை சில வருடங்களாகவே எவரும் அறியமாட்டார்கள் என்ற தெனாவட்டில் செய்திருக்கிறார்கள் இந்த காமுகன்கள்.

மேற்கே மட்டுமல்லாமல் நம்மூர்களிலும் கூட இவர்களின் பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக கேரளத்தில் பாதிரியார் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரீ ஜெஸ்மி என்பவர் ஆமென் என்ற புத்தகத்தில் பாதிரியார்களையும் அவர்களின் அட்டூழியங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் தனது புத்தகத்தில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரீகளும் உறவு வைத்திருந்தார்கள் எனவும், கன்னியாஸ்திரீகள் அவர்களுக்குள்ளாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் எழுதிப்போகிறார்.

பொதுவாக கத்தோலிக்க பாதிரியராக ஆக விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை வைத்திருக்கிறார்கள். தமக்கென்று எவரும் இருக்கக்கூடாது எனவும் அப்படி இருந்தால் அது திருச்சபைக்கும் அவர்கள் செய்யும் ஊழியப்பணிகளுக்கும் தடையாக இருக்குமென்பதால் இத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருச்?சபை

இயற்கையாகவே பாலியல் ரீதியான மாற்றங்களுக்குள்ளாகும் இருபாலரின் உடலை என்ன தான் கட்டுப்படுத்தினாலும் பலநேரங்களில் பாலியல் இச்சை என்பது தவிர்க்கவியலாதது. அது இயற்கையானதும் கூட. அதற்காகவே திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!

இவர்கள் செய்தவை அனைத்திற்கும் சேர்த்து இன்று கத்தோலிக்க சபைகளின் தலைவர் போப் பெனடிக்ட் கடவுளிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறாராம். என்னமோ போங்க :(

சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்.

Friday, May 14, 2010

Amazing Singing Of Amazing Grace

Lin Yu Chun sings Amazing Grace in the Taiwanese singing competition show Super Star. Its just AMAZING.


Tuesday, March 9, 2010

கடவுள் எந்த மதம்

சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு பதில் சந்தேகம் தான், என்பதே.

இத்தனை சாமியார்கள், கள்ளப்போதகர்களைக் கண்ட பின்னர் கூட தமிழகமும், தமிழனும், தமிழினமும் இன்னமும் அதே மதமென்னும் சாக்கடையில் வீழ்ந்து கிடக்கத்தான் செய்கிறது.

சில தினங்கள் முன்பு வரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை.

நல்லது எது! கெட்டது எது! என வேறுபிரிக்க தெரிந்த நம் மகா ஜனங்கள் ஏன் மனிதர்களை கடவுளாக உருவகம் செய்தனர் என்பது தான் கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயம்.

இவ்வுலகில் நல்லவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை என்ற விவிலியத்தின் ஒரு வாக்கு தான் நினைவிற்கு வருகிறது.

ஒருவர் ஒரு விஷயத்தை செய்த உடன் அது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் பிற மனிதர்களை நாடித் தேட வேண்டும்; ஏன் சாமிகளாக அவர்களை கருத வேண்டும்?அவர்களிடமிருந்து வாழும் வழிக்கான நெறிமுறையை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்; பின்னர் எதற்காக கூப்பாடு போட வேண்டும்?

நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே.

பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது தான் எனக்கு சரியெனப் படுகிறது.

மனிதனுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது தான், ஆனால் அவனை கடவுளென்றோ, சாமியென்றோ உருவகப்படுத்துவது கடவுள் என ஒருவர் இருப்பாரானால் அது அவருக்கு ஏற்படுத்தும் இழுக்கு என்பதாகவே பொருள் கொள்ள தோன்றுகிறது.

இன்னொரு விஷயமும் இந்த நேரத்தில் கேட்கத் தோன்றுகிறது, கடவுள் எந்த மதத்தை சார்ந்தவர்?!?

Sunday, February 21, 2010

Freddy Joseph's உந்தன் பிரசன்னத்தால்

சகோதரர். ஃப்ரெடி ஜோசப் அவர்களின் என் மீட்பர் இசைத்தட்டின் நான்காவது பாகத்தில் இடம்பெற்றுள்ள உந்தன் பிரசன்னத்தால் என்ற பாடலை இணைய நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.

சகோதரர் ஃப்ரெடியின் குரலுக்கும் அவரது பாடல்களுக்கும் எப்போதுமே வல்லமையுண்டு. அந்த வரிசையில் உந்தன் பிரசன்னத்தால் பாடலும் சேர்ந்திருக்கிறது.

சோதனைமிகு இந்த உலகில் அவரது பிரசன்னமும், வசனமும் மாத்திரமே நமக்கு பேராறுதல் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு அற்புதமான பாடல் இது.

இந்த பாடலை காணொளியாக(video) மாற்றி youtube இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் இணைய நண்பர்.ஆங்கிலத் திரைப்படம் ஒன்றின் காட்சிகளை இந்த பாடலுடன் இணைத்திருக்கிறார். பாடலின் கருத்தும், காணொளியின் காட்சிகளும் வெகு நேர்த்தியாக ஒன்றிப் போகின்றன. மிக அருமையாக அமைந்திருக்கிறது காணொளி.

காணொளியை கீழே இணைத்துள்ளேன்.


கீழே இருக்கும் காணொளி வால்டர் @ விக்டர் இசையில் எட்வின் பாடியது



உந்தன் பிரசன்னத்தால்

வழி நடத்தும்

சுத்திகரியும்

பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே

அன்பின் ஆவியானவரே

சரணம் 1

மனிதர்களால் வாழ்வில் எனக்கு

என்றும் போராட்டமே

உறவுகளால் வாழ்வில் எனக்கு

என்றும் மனதில் சஞ்சலமே

சரணம் 2

தனிமையில் வாடும் எனக்கு

உம் பிரசன்னம் ஆனந்தமே

கேள்விகளுள்ள எனக்கு

உம் வசனம் பேராறுதலே

Saturday, January 16, 2010

Amazing Haitians

It was a great feeling and I felt amazed when i saw hundreds of HAITIANS sung hymns and clapping on the streets of Port-Au-France in HAITI.

I have never seen such a beautiful moment and I'm deeply moved by their faith and spirit. May God give them the strength to cope with all sort of distress.

God Bless.

Friday, January 15, 2010

SA @ HAITI Relief Work

One of the caribbean country HAITI was hit by a massive earthquake which measured 7.0 on Richter scale on 01.12.2010. Thousands have lost their loved ones and shelter.

SALVATION ARMY is doing a great Job in HAITI along with other International organizations like Red Cross and CARE.

You can find the list of organizations which are currently providing relief work in HAITI from the follwing link http://www.cnn.com/SPECIALS/2007/impact/

Also you can get the relief work upadtes of the SALVATION ARMY in TWITTER by following http://twitter.com/SalvationArmyUS Know more from http://blog.salvationarmyeds.org/?p=195

May God Bless the Army and its works



Thursday, December 31, 2009

Ponnaana Naeram-Carols @ SA Hall, KUWAIT


Here's a song named PONNAANA NAERAM - பொன்னான நேரம் which was performed by myself and Composer Walter Kailash was originally composed by Mr.Monics from Nagercoil. We grown seeing him performing in Big stages and on Big Occasions. He is our mentor.

We thank Mr. Monics for the song and the Majors and lieutenants of the KUWAIT SA Hall for this great opportunity.



Thursday, December 24, 2009

Merry Christmas


Wednesday, November 11, 2009

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் SALVATION ARMY



ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.



குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom


Sunday, November 8, 2009

ROCK THUNDER இடம் எச்சரிக்கையாயிருங்கள்

ஆர்குட் எத்தனை அற்புதமானதோ அத்தனை ஆபத்தும் நிறைந்தது என்பதற்கு கடந்த சில நாட்களாக நிகழும் நிகழ்வுகளே சாட்சி.

ஆர்குட் வழியாக கிறிஸ்தவ அன்பர்களுக்கிடையேயான அன்பை முறிக்கவும், சபைகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்று வரும் கயவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக நாகர்கோவில் வட்டம் இலந்தையடி கிராமத்தைச் சார்ந்த ஒரு விஷமி THE ROCK THUNDER என்ற பெயரில்(ஒன்றல்ல THE ROCK THUNDER-PAROSH, THE ROCK THUNDER MINISTRY, THE ROCK THUNDER-SHEPHATIAH, THE ROCK THUNDER-ARAH, THE ROCK THUNDER PAHATH என ஐந்து பெயர்களில்) இரட்சணிய சேனைக்கும், சேனை பணிகளுக்கும் எதிராக அவதூறை பரப்பி வருகிறான்.

அவனது ஊழியம் நேரடியாக பரலோகத்திருந்து வருகிறது என்பது அவன் பிரச்சாரம். அது மட்டுமல்லாமல் அவன் தீர்க்கத்தரிசனம் வேறு உரைக்கிறானாம்.

நண்பர் ஒருவருடனான நேற்றைய உரையாடலின் போது... இரட்சணிய சேனை ஊழியக்காரர் ஒருவனின் மகன் இருசக்கர வாகன விபத்தில் விரைவில் பலியாவார் என கடவுள் அவனிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கிறான்.

அந்த விஷமியிடம் இரட்சணிய சேனை ஊழியக்காரர்களின் பிள்ளைகளும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் இடிமுழக்கம் என அறியப்படும் ROCK THUNDER ன் ஊழியங்களைக் குறித்து நான் நன்கு அறிவேன். மது அருந்தி விட்டு போதகம் செய்து வரும் அவர்கள் நடவடிக்கைகளையும் அறிவேன்.

எச்சரிக்கையாயிருங்கள்.
அவனது ஆர்குட் பக்கத்தை காண இங்கே சொடுக்கவும்

Sunday, October 4, 2009

Please dont forward...

It's quite interesting and funny to see e-mails circulating all around the world about voting against the banning of christian preachers and christmas .
SNOPES says its absolutely false. Know more from the following link. Friends... please dont forward such e-mails. http://www.snopes.com/politics/religion/fcc.asp
(Click the picture to read more)

Tuesday, August 25, 2009

பகட்டை விரும்பும் இரட்சணிய சேனை(யர்கள்)

இல்லாதிருப்போருக்கு இரங்கி
இறைப்பணி செய்வதற்காக
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட
இரட்சணிய சேனையின்-பணி
இன்று இந்தியாவில்
இதயமற்று இருப்பது
இதயத்தை கனக்கச் செய்கிறது.

இரு வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் புகழ்பெற்ற சபை/படைஸ்தலம்/மண்டபம்/தேவாலயம்!? ஒன்றில் ஆராதனையினிடையே நிகழ்ந்த சம்பவம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல.

உலகில் பிரச்சினை இல்லாத இடம் தான் எங்கிருக்கிறது. பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்த்திருக்கலாம்.இருதரப்பினரும் சரியான ஒரு முடிவிற்கு வராமல் இருப்பது தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தான் இடமளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இன்று பதவி, புகழ், பகட்டு இவற்றை குறிவைத்து இயங்கும் சிலராலும் நான் என்ற அகங்காரமும், சரியான தலைமையும், வழிநடத்துதல் இல்லாமையும் தான் இதுபோன்ற தர்மசங்கடமான நிலைகளை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.

இது ஒருபுறமிருக்க ஆராதனை நடைபெறும் இடங்கள் இன்று தேவைக்கு மிஞ்சிய அலங்காரங்களாலும், ஆக்கிரமிப்புகளினாலும் அலங்கோலப்படுத்தப்படுகின்றன.இயற்கையை மாய்த்து செயற்கையை ஏற்படுத்துவதோடு அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள்.

குறிப்பாக பாளையில் மணிக்கூண்டு வைக்க வேண்டுமென்பதற்காக உயிராய் இருந்த பல மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல கிராமங்களிலும், வட இந்தியாவிலும் ஆராதனைக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாதிருக்கையில் இங்கோ பல லட்சங்கள் செலவில் இவர்களுக்கு மணிக்கூண்டு என்ன தேவைக்கோ தெரியவில்லை.

இறைவன் பெயரில்
இறைப்பணி நடக்கின்றதோ இல்லையோ
இங்கு-பகட்டான பிற பணிகள்
இலகுவாக நடக்கின்றன

Saturday, May 16, 2009

"கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்"-விவிலியத்தின் பார்வையில்

[Prevention Of Forcible Conversion Of Religion Act-In the aspect of BIBLE]

'இந்த கட்டுரை, சட்டம் அமுலாக்கப்பட்ட வருடமான 2002ல் என்னால் எழுதப்பட்டு போர்ச்சத்தத்தில் வெளியிடுவதற்கு மறுக்கப்பட்ட ஒன்று'

அனைவருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில வருடங்களுக்கு முன்பதாக தமிழகத்தில் 'கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்' என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

அதன் தொடர்ச்சியாக பல கிறிஸ்தவ சபைகளும்,பிற மதங்களைச் சார்ந்தவர்களும் அந்த சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பலவிதமான போராட்டங்களை நடத்தினர்.

இவைகளுக்கு மனுஷராலுமல்ல மனுஷன் மூலமாயுமல்ல,இயேசு கிறிஸ்துவினாலும் அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும் (கலாத்தியர் 1:1) அப்போஸ்தலர்களாலும், கர்த்தரால் ஏவப்பட்டவர்களாலும் எழுதப்பட்ட வேதாகமத்தின் இரகசியங்களை நாம் ஆராய்வது அவசியமாகிறது.

1. கிறிஸ்தவம் மதம் அல்ல 'மார்க்கம்'

முதலாவது கிறிஸ்தவம் என்பது மதமல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எபிரெயர் 10:19ல் ஆகையால் சகோதரரே இயேசுவானவர் புதிதும் ஜீவனுமான 'மார்க்கத்தை' நமக்கு உண்டுபண்ணின படியால்...என்ற வசனத்தினாலும்;யோவான் 14:6ல் நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும் கிறிஸ்தவம் என்பது மதமல்ல அது நித்திய ஜீவனுக்கான மார்க்கம் அல்லது வழி என்பது நிரூபணமாகிறது.

மேலும் யோவான் 14:3,4 மற்றும் 4-6 வசனங்களில்... நான் போய் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு...நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்;நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள் என்றும் இயேசு கிறிஸ்து உரைத்திருக்கிறார்.

இவ்விதமாக இயேசு கிறிஸ்து தனது சீஷர்களுடன் உறவாடும் போது 'வழி'யை அறிந்திருக்கிறீர்கள் என்று தான் வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர மதம் என்ற உச்சரிப்பையே அவர் உபயோகிக்கவில்லை.
(வழி/அல்லது மார்க்கத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் way என்பதாகவே இருக்கிறது)

இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை அல்லது மார்க்கத்தை இந்த உலகிற்கு காட்ட வந்தாரே அன்றி ஒரு மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது.

மதத்தின் பெயரால் நாம் பிறரை கட்டாயப்படுத்தினால் அல்லவா நாம் பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்.நாமோ கிறிஸ்துவின் அன்பையும்,நித்தியஜீவனுக்கான வழியையும் அல்லவா அவர்களுக்கு காட்டுகிறோம்.

மதம் என்பது வெறி,கோபத்தின் உச்சம் என்பதாக பொருள்படும்.எனவே மதம் பிடித்த யானையைப் போல் பிற மாக்களைப் போல நடவாமல் ஆவியின் கனிகளான (கலாத்தியர் 6:22,23)அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகளை கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாற்கு 16:15ல் கூறியுள்ளபடி... 'உலகமெங்குள்ள மக்களுக்கு அவருடைய சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது நமது கடமையாயிருக்கிறது.

2.கட்டாயத்தின் மூலம் மனித மதங்களை மாற்றுவதல்ல கிறிஸ்தவம்

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து,'கட்டாயமாய் அல்ல', மனப்பூர்வமாய்...சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களுக்காக அல்ல(இன்றைய ஆட்சியாளர்களைப் போல) மந்தைக்கு மந்திரிகளாகவும் கண்காணிப்பு செய்யுங்கள் என்ற I பேதுரு 5:2,3ன் படியும்;அவனவன் விசனமாயுமல்ல,கட்டாயமாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் என்ற IIகொரிந்தியர் 9:7ன் கூற்றின்படியும் கட்டாயப்படுத்தல் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தின் வேரிலேயே கிடையாது என்பது தெளிவாகிறது.

அப்போஸ்தலர் 26:11-18வரையான வேத வார்த்தைகளை உற்று நோக்கும் போது முன்னாட்களில் கட்டாயப்படுத்தியது எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளவியலும்.

அப்போஸ்தலர்26:16 ன் படி இயேசுகிறிஸ்துவின் மூலம் கட்டாயத்தினால் அல்ல... அவரது தரிசனத்தால்,பெரும் யூதனாயிருந்த சவுல் தேவ ஊழியக்காரனான பவுலாக மாறிய நிகழ்விலிருந்து கட்டாயத்தின் மூலம் மதம் மாற்றம் என்ற வார்த்தைக்கு கிறிஸ்தவ சரித்திரத்திலேயே இடம் கிடையாது என்பது மீண்டும் தெளிவாகிறது.

இதே பவுலானவர் தான் சுவிசேஷம் பிரசிங்கித்ததன் விளைவாக கட்டப்பட்டவனாய் இருக்கையில்... பிலேமோனுக்கு உதவி வேண்டி பின்வருமாறு எழுதுகிறார் (பிலேமோன் 1:14) நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.

நெருக்கத்தின் நிலையிலும் பவுல் கட்டாயப்படுத்தவில்லை என்பது இதில் கண்கூடு.எனவே கிறிஸ்தவம் தனது சுதந்தரத்தின் போதும்,நெருக்கத்தின் நடுவிலும் கூட பிறரைக் கட்டாயப்படுத்துவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

3.சட்டம் நமக்கு என்ன செய்து விடும்... இல்லையென்றால் நாம் பாடுபடுவதை வெறுக்கிறோமா?

கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் மட்டுமல்ல பிற பிரச்சினைகள்,பாடுகள், மிரட்டல்கள் வருகையிலும் கிறிஸ்தவர்கள் ஏன் சோர்ந்து போகிறோம்? அவ்விதமான பாடுகளை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?

"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்,பரலோகராஜ்யம் அவர்களுடையது" என்று எட்டு மோட்சானந்தங்களில் கிறிஸ்து சொல்லிச் செல்லவில்லையா?

கட்டாயமே கிறிஸ்தவ மார்க்கத்தில் இல்லாத நிலையில் நாம் எதற்கு அஞ்சுகிறோம்?சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள்,பேரணிகள்,மாநாடுகள் நடத்துவதால் என்ன விளையப் போகிறது?

இவைகளினால் காலமும்,பணமும் தான் விரயமாகிறது.தொடர்ந்து போராடுவது கட்டாயப்படுத்தலை அனுமதிக்கக் கோருவது போலவும் ஆகி விடுகிறது.கிறிஸ்தவமே கட்டாயப்படுத்தலை அனுமதிக்காத நிலையில் நாம் ஏன் முரண்படுகிறோம்?

அப்படியே சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு நாம் அவதிக்குள்ளானாலும் அதனால் பேதுரு எழுதுகிறபடி தேவ நாமம் மகிமைப்படுமே!! Iபேதுரு 4:16 - ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.

பவுல் பாடுகள் குறித்து I கொரிந்தியர் 6:7 ல் பின்வருமாறு கூறுகிறார்,நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது,அப்படி செய்கிறதை விட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுவதில்லை,ஏன் நஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுகிறதில்லை?

இன்னும் கூறப்போனால் இயேசு கிறிஸ்துவும் பொய் குற்றச்சாட்டுகளினால் நிமித்தமே பாடுகள் அனுபவித்தார்.

இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக தரித்துக் கொள்ளுங்கள் என்று பவுல் I பேதுரு 4:1 ல் எழுதிச் சென்றபடி சகிப்புத்தன்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு கிறிஸ்தவ மார்க்கத்தைப் பிறருக்குக் காட்ட எத்தனிப்போம்.