Wednesday, November 11, 2009

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் SALVATION ARMYஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்பது அறிஞர் அண்ணாவின் வாக்கு .அதைப் போன்று SALVATION ARMY எனப்படும் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏழைகளுக்கும், தேவையிலிருப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்லெண்ணத்தில் 1865 ல் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் பகுதியில் வில்லியம்பூத் மற்றும் கேதரின் பூத் என்னும் தம்பதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ நிறுவனம் தான் இரட்சணிய சேனை என்றழைக்கப்படும் SALVATION ARMY.

இன்று 118 நாடுகளில் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது Salvation Army. குறிப்பாக இயற்கை பேரழிவுகளிலும், பெரும் விபத்துகளிலும் தங்களது உதவிக்கரங்களை நீட்ட SA எப்போதுமே தவறியதில்லை.

2001 ல் அமெரிக்காவில், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் Red Cross க்கு இணையாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டதும் Salvation Army தான்.

2004 ல் இந்தியா உட்பட்ட தெற்காசிய நாடுகள் ஆழிப்பேரலையின் (சுனாமி) தாக்குதலுக்கு உள்ளான போதும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்கிறது.குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தியதோடு சாலையையும் சீரமைத்துக் கொடுத்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. அந்த சாலைக்கு அரசாங்க அனுமதியுடன் வில்லியம் பூத் சாலை எனவும் பெயரிடப்பட்டது.

தமிழகத்திலும் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி என பல பணிகளை மேற்கொண்டுவருகிறது. மருத்துவப்பணியில் சொல்லும்படியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரத்தில் காதரீன் பூத் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

காலங்காலமாக சிறந்து விளங்கிவரும் உலகின் பத்து பிரபல அமைப்புகளை 2004 ல் Booz Allen Hamilton என்ற நிறுவனம் பட்டியலிட்டது. அதில் ஆக்ஸ்ஃபோர்டு,ஒலிம்பிக் விளையாட்டுகள், சோனி நிறுவனம்,ரோலிங் ஸ்டோன்ஸ் இவைகளின் வரிசையில் Salvation Army ம் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Salvation_army
http://www.salvationarmy.org/ihq/www_sa.nsf
http://www1.salvationarmy.org/ind

http://en.wikipedia.org/wiki/Catherine_Booth_Hospital

நன்றி
SA,
Gee Jo Sam,

CBH - Gershom


4 comments:

babe said...

SALVATIONIST EDWIN அவர்களின் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் SALVATION ARMY" என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரை படிதேன் மிக்க மகிழ்ச்சி ,இந்த மாபேரும் சேனைல் என் பெற்றோர் சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றினார்கள் என்பதை கூறுவதில் பெருமையாக இருக்கின்றது ஏன் என்றால் இந்த சேனைமுலம் தான் என் தந்தை கிறிஸ்து ஏசுவை அறிந்து கொண்டார்கள் .அதன் மூலம் தான் நாங்கள் இன்று ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கின்றோம் என்று கூறுவதில் மிகவும் பெருமையாக இருக்கின்றது .இந்த சேனையின் முக்கிய கொள்கை soap,soup ,salvation , கஷ்டத்தில் ஒருவன் வாடும் பொது அவன் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அதன் பின் தான் அவர்களுக்கு இறைவனின் சுவிசேசம் கூறுவார்கள் .எந்த விதமான மொழி ,இனம் மதம் ஒரு பாகுபடும் இல்லாமல் தேவை அறிந்து சேவை செய்வதில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை .நான் இந்த சேனையின் ஒரு படை வீரன் (அங்கத்தினர் ) என்று சொல்லுவதில் மிகவும் பெருமைபடுகின்றேன் .
வாழ்க சேனை வளர்க சேனை பணி

GERSHOM said...

இரட்சணிய சேனை செய்ற நன்மைகள் ஏராளம்.எங்கப்பாவும் ஒரு சேனை ஊழியர்,நானும் அதில் ஒரு வீரன்'னு சொல்றதுல பெருமை படுறேன்.

இரட்சணிய சேனையின் காதரின் பூத் மருத்துவ மனையில் படித்து தான் இந்தளவு உயர்ந்திருக்கேன்,அதனால என்றைக்கும் சேனைக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன்.

"சேனையிலே ஆனந்தம்".

கர்த்தர் சேனைக்கு நல்ல ஊழியகாரர்களை கொடுப்பதற்காக ஜெபிப்போம்.

selvin g p keelkudi said...

I am happy to read Good things about THE SALVATION ARMY.
As a SALVATIONIST I am very proud of you.Thank you very much.

எட்வின் said...

நன்றிங்க செல்வின்