Friday, December 24, 2010

அன்பின் வாழ்த்துக்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
இவ்வுலகை மீட்கவே
இருளை நம்மில் அகற்ற
நள்ளிரவில் தோன்றினார்

முன்னணை மீதினில்
மரியின் மடியினில்
மனுவான தேவனே-உம்
மகத்துவம் பாடுவோம்

மண்ணில் வேதனை-தினம்
மடியும் மாந்தர்கள்
மாற்ற வேண்டுமே
உம் இரண்டாம் வருகையே

2009 ல் எழுதிய பாடல்

Tuesday, December 14, 2010

பூத் டக்கர் நினைவு ஆலயம்

12.12.2010 அன்று திறக்கப்பட்ட புதிய பூத் டக்கர் நினைவு ஆலயத்தின் புகைப்படங்கள்.


நன்றி: விக்டர் எபநேசர், ஸ்மித் ஐசக், சுந்தர் சிங்

Tuesday, November 30, 2010

என்று மாறுமோ தமிழக இரட்சணிய சேனை!


கடந்த மாதம் அக்டோபரில் தமிழகம் சென்றிருந்த போது இரட்சணிய சேனை பணிகளையும், பல officers களையும் காண நேர்ந்தது. அதிகமாக எந்தவொரு மாற்றத்தையும் பார்க்கமுடியவில்லை. ஆட்களும், ஆலயங்களும் (ஆவிக்குரிய ரீதீயில் இல்லை)வளர்ந்ததைத் தவிர.

தான் தான் உயர்ந்தவன் என்ற கர்வமும், சுயநலம் என்ற வியாதியும், கொள்ளையடித்தலும் இன்னும் தொடரத் தான் செய்கிறது. அனுபவ சாட்சி என்ற பெயரில் இறைவனை முன்னிறுத்தாமல் சுயபுராணம் பாடுவதும் இன்னும் மாறவில்லை.

என்று மாறுமோ தமிழக இரட்சணிய சேனை


Friday, July 23, 2010

உலகம்-வாழ்க்கை-விவிலியம் உண்மையறிந்தவர் யாரோ

இதுவரைக்கும் ஒண்ணுமே புரியல உலகத்தில;இப்பவும் ஒண்ணும் புரியல; இனிமேலும் எதுவும் புரிய வாய்ப்பிருக்கான்னும் தெரியல.

உலகம் உண்டாகியது என்பவர்கள் ஒருபுறம்;இறைவனால் உண்டாக்கப்பட்டது என்பவர்கள் மறுபுறம்.அதே போன்று இறைவன் மனிதனை தோற்றுவித்தான் என்பவர்கள் இருக்கையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி!

இறைவன் படைத்தாலும் இன்றைக்கு இத்தனை மனித இனங்கள், மனித மொழிகள், மனித நிறங்கள், பாகுபாடுகள், வேற்றுமைகள் எப்படி உருவாகின என்பதும் புரியவில்லை!

வானம், பூமி உள்ளிட்ட உலகின் அனைத்தையும் இறைவன் படைத்தார் என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் இரவும் மற்றொரு பகுதியில் பகலும் ஏன் நிலவுகிறது என இன்று வரை புரியவில்லை.அதற்கு ஆதாரமான குறிப்பு ஏதும் விவிலியத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை!

எப்படியோ உலகத்தில் வந்தோம் எப்படியோ போகிறோம். இதனிடையில் குழந்தைப்பருவம்,வாலிபம்,முதுமை என பல பருவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது.

அவற்றோடு வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், ஏமாற்றம், இழப்பு, ஏற்பு, நன்மை, தீமை என பல அனுபவங்களையும் காண வேண்டியுள்ளது.

இதுல பரலோகம் போகணும்னா கிறிஸ்தவத்தில திருமுழுக்கு @ ஞானஸ்நானம் எடுக்கணுமாமே! இல்லன்னா போக முடியாதாம். ஆனா சிலபேர் பரலோகத்துக்கு திருமுழுக்கு எடுத்திட்டு இந்த பூலோகத்தில பண்ற அசிங்கமும் அநியாயமுமிருக்குதே அது கொஞ்சநஞ்சமா!அப்போ இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் பரலோக வாய்ப்பை இழக்கின்றதா! இது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏன் இல்லை!

சாமியார்கள் சொல்றத கேட்டா நல்லது நடக்கும்,மேலோகத்திற்கு போகலாமுன்னு வேற கொஞ்சம் பேர் நம்புறாங்க.ஆனா நம்புற எல்லாருக்கும் நல்லது நடக்கிறது இல்லையே ஏன்!

கேளுங்கள் தரப்படும்ணு விவிலியத்தில சொல்லிருக்கு அதோட... நீ கேக்கிறதுக்கு முன்னமே உனக்கு என்ன தேவை என்ன என்பதை அறிவேன் அப்படின்னும் சொல்லியிருக்கு. கேக்கிறதா வேண்டாமா!

ஒவ்வொருவரின் செயல்களும், உலக நிகழ்வுகளும் இறைவனின் சித்தப்படி அதாவது இறைவன் எது நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அப்படித்தான் நடக்கும் என்கிறது விவிலியம். அப்படியென்றால் ஒருவர் நன்மை செய்ய நினைப்பதும் இன்னொருவர் தீமை செய்ய நினைப்பதும் எல்லாம் இறைவன் செயல் தானா? அப்போ தப்பு செய்றவங்க மேல தப்பில்லையா! (இப்போ நீங்க தலய பிச்சிக்கிறீங்களா? இருங்க இருங்க, கடைசி வர படிச்சிட்டு பிச்சுக்குங்க)

ஒருவரின் (ஆதாமின்) பாவத்தினால் மனித குலமே வெறுக்கப்பட வேண்டுமா? ஆதாமின் பாவமும் இறைவன் அறியாமல் நடந்திருக்காது அல்லவா! இன்று சிசுக்கொலை துவங்கி இனப்படுகொலை வரை, வறுமை துவங்கி பட்டினி வரை மனித குலம் படும் அல்லல்களை காணத்தான் ஆதாமை பாவம் செய்ய அனுமதித்தாரா!

இந்த கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் தவறாமல் காலையில் உதயமாகும் சூரியனும், இரவு பகல் மாறுதலும், மழையும், இயற்கையும் ஏதோ ஒன்றின் அல்லது எவரோ ஒருவரின் (இறைவன்)கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாகத் தான் மனதிற்கு படுகிறது.

இந்த கேள்விகளும், அனுபவமும் அடுத்த நிமிடம் நன்மையோ தீமையோ என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாளை என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலைப்படாமல் "கடவுளை நம்பு கடமையை செய்" என்ற மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியின் கருப்பொருளின் படி தான் இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை... எதுவும் புரியாமல்.

Monday, June 14, 2010

வெள்ளுடையில் சில கருப்பு ஆடுகள்

கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள்ளேயே இன்று பலர் குளிர்காய்ந்து வருவது ஒருபுறமிருந்தாலும். வெள்ளுடை அணிந்த அதன் தலைவர்கள் பலர் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களால் மன்னிக்க முடியாத(ஒருவேளை தெய்வம் மன்னிக்கக்கூடும்!!!) செயல்களைச் செய்வது இன்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக கத்தோலிக்கர்கள் என்றும், கிறிஸ்தவத்தின் தலைமையே நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோமிலும், கனடா மற்றும் அயர்லாந்திலும் கத்தோலிக்க பாதிரியார்கள் நசித்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கைகள் ஏராளம். Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதலை சில வருடங்களாகவே எவரும் அறியமாட்டார்கள் என்ற தெனாவட்டில் செய்திருக்கிறார்கள் இந்த காமுகன்கள்.

மேற்கே மட்டுமல்லாமல் நம்மூர்களிலும் கூட இவர்களின் பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக கேரளத்தில் பாதிரியார் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரீ ஜெஸ்மி என்பவர் ஆமென் என்ற புத்தகத்தில் பாதிரியார்களையும் அவர்களின் அட்டூழியங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் தனது புத்தகத்தில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரீகளும் உறவு வைத்திருந்தார்கள் எனவும், கன்னியாஸ்திரீகள் அவர்களுக்குள்ளாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் எழுதிப்போகிறார்.

பொதுவாக கத்தோலிக்க பாதிரியராக ஆக விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை வைத்திருக்கிறார்கள். தமக்கென்று எவரும் இருக்கக்கூடாது எனவும் அப்படி இருந்தால் அது திருச்சபைக்கும் அவர்கள் செய்யும் ஊழியப்பணிகளுக்கும் தடையாக இருக்குமென்பதால் இத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருச்?சபை

இயற்கையாகவே பாலியல் ரீதியான மாற்றங்களுக்குள்ளாகும் இருபாலரின் உடலை என்ன தான் கட்டுப்படுத்தினாலும் பலநேரங்களில் பாலியல் இச்சை என்பது தவிர்க்கவியலாதது. அது இயற்கையானதும் கூட. அதற்காகவே திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!

இவர்கள் செய்தவை அனைத்திற்கும் சேர்த்து இன்று கத்தோலிக்க சபைகளின் தலைவர் போப் பெனடிக்ட் கடவுளிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறாராம். என்னமோ போங்க :(

சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்.

Friday, May 14, 2010

Amazing Singing Of Amazing Grace

Lin Yu Chun sings Amazing Grace in the Taiwanese singing competition show Super Star. Its just AMAZING.


Tuesday, March 9, 2010

கடவுள் எந்த மதம்

சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு பதில் சந்தேகம் தான், என்பதே.

இத்தனை சாமியார்கள், கள்ளப்போதகர்களைக் கண்ட பின்னர் கூட தமிழகமும், தமிழனும், தமிழினமும் இன்னமும் அதே மதமென்னும் சாக்கடையில் வீழ்ந்து கிடக்கத்தான் செய்கிறது.

சில தினங்கள் முன்பு வரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை.

நல்லது எது! கெட்டது எது! என வேறுபிரிக்க தெரிந்த நம் மகா ஜனங்கள் ஏன் மனிதர்களை கடவுளாக உருவகம் செய்தனர் என்பது தான் கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயம்.

இவ்வுலகில் நல்லவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை என்ற விவிலியத்தின் ஒரு வாக்கு தான் நினைவிற்கு வருகிறது.

ஒருவர் ஒரு விஷயத்தை செய்த உடன் அது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் பிற மனிதர்களை நாடித் தேட வேண்டும்; ஏன் சாமிகளாக அவர்களை கருத வேண்டும்?அவர்களிடமிருந்து வாழும் வழிக்கான நெறிமுறையை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்; பின்னர் எதற்காக கூப்பாடு போட வேண்டும்?

நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே.

பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது தான் எனக்கு சரியெனப் படுகிறது.

மனிதனுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது தான், ஆனால் அவனை கடவுளென்றோ, சாமியென்றோ உருவகப்படுத்துவது கடவுள் என ஒருவர் இருப்பாரானால் அது அவருக்கு ஏற்படுத்தும் இழுக்கு என்பதாகவே பொருள் கொள்ள தோன்றுகிறது.

இன்னொரு விஷயமும் இந்த நேரத்தில் கேட்கத் தோன்றுகிறது, கடவுள் எந்த மதத்தை சார்ந்தவர்?!?

Sunday, February 21, 2010

Freddy Joseph's உந்தன் பிரசன்னத்தால்

சகோதரர். ஃப்ரெடி ஜோசப் அவர்களின் என் மீட்பர் இசைத்தட்டின் நான்காவது பாகத்தில் இடம்பெற்றுள்ள உந்தன் பிரசன்னத்தால் என்ற பாடலை இணைய நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.

சகோதரர் ஃப்ரெடியின் குரலுக்கும் அவரது பாடல்களுக்கும் எப்போதுமே வல்லமையுண்டு. அந்த வரிசையில் உந்தன் பிரசன்னத்தால் பாடலும் சேர்ந்திருக்கிறது.

சோதனைமிகு இந்த உலகில் அவரது பிரசன்னமும், வசனமும் மாத்திரமே நமக்கு பேராறுதல் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு அற்புதமான பாடல் இது.

இந்த பாடலை காணொளியாக(video) மாற்றி youtube இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் இணைய நண்பர்.ஆங்கிலத் திரைப்படம் ஒன்றின் காட்சிகளை இந்த பாடலுடன் இணைத்திருக்கிறார். பாடலின் கருத்தும், காணொளியின் காட்சிகளும் வெகு நேர்த்தியாக ஒன்றிப் போகின்றன. மிக அருமையாக அமைந்திருக்கிறது காணொளி.

காணொளியை கீழே இணைத்துள்ளேன்.


கீழே இருக்கும் காணொளி வால்டர் @ விக்டர் இசையில் எட்வின் பாடியது



உந்தன் பிரசன்னத்தால்

வழி நடத்தும்

சுத்திகரியும்

பெலப்படுத்தும்

தூய ஆவியானவரே

அன்பின் ஆவியானவரே

சரணம் 1

மனிதர்களால் வாழ்வில் எனக்கு

என்றும் போராட்டமே

உறவுகளால் வாழ்வில் எனக்கு

என்றும் மனதில் சஞ்சலமே

சரணம் 2

தனிமையில் வாடும் எனக்கு

உம் பிரசன்னம் ஆனந்தமே

கேள்விகளுள்ள எனக்கு

உம் வசனம் பேராறுதலே

Saturday, January 16, 2010

Amazing Haitians

It was a great feeling and I felt amazed when i saw hundreds of HAITIANS sung hymns and clapping on the streets of Port-Au-France in HAITI.

I have never seen such a beautiful moment and I'm deeply moved by their faith and spirit. May God give them the strength to cope with all sort of distress.

God Bless.

Friday, January 15, 2010

SA @ HAITI Relief Work

One of the caribbean country HAITI was hit by a massive earthquake which measured 7.0 on Richter scale on 01.12.2010. Thousands have lost their loved ones and shelter.

SALVATION ARMY is doing a great Job in HAITI along with other International organizations like Red Cross and CARE.

You can find the list of organizations which are currently providing relief work in HAITI from the follwing link http://www.cnn.com/SPECIALS/2007/impact/

Also you can get the relief work upadtes of the SALVATION ARMY in TWITTER by following http://twitter.com/SalvationArmyUS Know more from http://blog.salvationarmyeds.org/?p=195

May God Bless the Army and its works