
You may have been abandoned in life by your parents, or your spouse, or your children, or your friends. Because of that abandonment, you approach this Christmas season in pain and full of heartache. But, the Bible says God will never abandon you

இரட்சணிய சேனை தமிழ் பாடல் எண் 144
English song book # 41"How sweet the name of jesus sounds"
Verses: John Newton
சரணம்-1
நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
பல்லவி
இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்
இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்
இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்
இயேசுவின் நாமமே
சரணம்-2
அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாக தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே-இயேசுவின்
சரணம்-3
பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்யம் தந்திடும்-இயேசுவின்
சரணம்-4
என் ஜீவன் போகும் நேரமும்
உம் நாமம் பற்றுவேன்
எப்போதும் அதைப் பாடவும்
விண் கரை ஏறுவேன்-இயேசுவின்
நம்பிடுவேன் எந்நாளும் - Simply Trusting Everyday
சரணம்-1
நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயர் ஆனாலும்
எந்தன் ஏசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்
பல்லவி
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
ஏசுவையே நம்புவேன்
சரணம்-2
ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவி தான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார்-நேரங்கள்
சரணம்-3
பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி ஏசை நம்புவேன்-நேரங்கள்
சரணம்-4
ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்
ஏசுவையே நம்புவேன்-நேரங்கள்
சரணம்-1
நீ உயிர் பெறவே
நான் இரத்தம் சிந்தினேன்
நீ மீட்கப்படவே
நான் விலையாகினேன்
என் ஜீவன் நான் தந்தேன் தந்தேன்
நீ என்னத்தை தந்தாய்
சரணம்-2
சதாகால இன்பம்
நீ பெற்று வாழ்ந்திட
இவ்வுலகில் துன்பம்
வந்தேன் சகித்திட
அநேகாண்டாய் பட்டேன் பாடு
ஓர் நாள் நீ தந்தாயா
சரணம்-3
மகத்வ மாளிகை
உனக்காய் நான் விட்டேன்
உலகின் வாதையை
உனக்காய் சகித்தேன்
தந்தேனே நான் என்னை என்னை
நீ கொணர்ந்தாய் எதை
சரணம்-4
உன் ஜீவன் தத்தம் செய்
உன் நேச மீட்பர்க்காய்
உலக வாழ்வு பொய்
ஜீவி நித்யத்திற்காய்
குப்பையாய் உன் எல்லாம் தந்து
அவரைப் பின் செல்லு
Before Thy Face Dear Lord ESB # 409
In Tamil: உம் முன் நிற்க தேவே
சரணம்-1
உன் முன் நிற்க தேவே
என் நிலை காட்டுமே
நான் பாடிடும் எக்கேள்விக்கும்
விடை அளிப்பேனே
பல்லவி
கெஞ்சும் வேளையில்
உம் கிருபையால்
நெஞ்சின் குறை யாவையும்
நேரில் காட்டும் மீட்பா
சரணம்-2
முன் போல் நான் இப்போதும்
சன்மார்க்க ஜீவியம்
உம் ஆவி நிறைந்தவனாய்
பின்பற்றி வாரேன் நான்-கெஞ்சும்
சரணம்-3
உம் முன் செய்கையிலும்
என் உள்ளம் சுத்தமாய்
எந்த நாளும் என் இரட்சிப்பை
நான் காத்துக் கொண்டேனா-கெஞ்சும்
சரணம்-4
முன்னுள்ள வைராக்யம்
இந்நாளிலுமுண்டா
உம் ஊழியத்தில் இன்னும் நான்
இன்பம் காண்கிறேனா-கெஞ்சும்
சரணம்-5
துன்பம் இல்லா இடம்
தேடி நான் செல்வேனா
வன் போர்தனில் நிலையாது
மாறுபவன் நானா-கெஞ்சும்
Lord I Make a Full Surrender
SA ESB # 504
சரணம்-1
தேவா என்னைப் படைக்கிறேன்
இதோ என் யாவும் தாரேன்
உந்தன் மாநேசம் எந்தனைபந்திப்பதினால்
என் நேசம் பாசம் யாவையும்
இதோ அங்கீகரியும்
உம்மால் காக்கப் பட்டென்றும்
நான் நிலைத்திருப்பேன்
பல்லவி
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
எனதெல்லாம் படைத்தேன்
பூரண இரட்சிப்படைந்தேன்
மீட்பர் இரத்தத்தால்
சரணம்-2
என் மனம் சித்தம் யாவுமே
சந்தோஷமாய் நான் தாரேன்
பூரணமாய் சுத்தம் செய்யும்
தீமையை நீக்கும்
தாரேன் என் முழு ஜீவனை
கேளும் என் விண்ணப்பத்தை
உம் சொந்தம் ஆனதால்
இப்போ நான் படைக்கிறேன்-ஜெயம்
சரணம்-3
தேவா நான் உம் ஏவுதலால்
பூசையாய் படைக்கிறேன்
இரத்தத்தால் வாங்கப்பட்டதால்
நம்பி ஜீவிப்பேன்
நேச சர்வ வல்லவரே
எனக்கும்மைக் காட்டுமேன்
மரித்தும்மை பார்க்கும் மட்டும்
பாதை காட்டுமேன்-ஜெயம்
Jesus Keep Me Near The Cross ESB # 115
In Tamil:உம் குருசண்டை இயேசுவே
சரணம்-1
உம் குருசண்டை இயேசுவே
வைத்தென்னைக் காத்திடும்
கல்வாரி ஊற்றினின்று
பாயுது ஜீவாறு
பல்லவி
சிலுவை சிலுவை
என்றும் என் மகிமை
அக்கரை சேர்ந்தென் ஆத்மா
இளைப்பாறு மட்டும்
சரணம்-2
குருசண்டை நின்ற என்னை
கண்டார் இயேசு அன்பால்
வீசிற்றென்மேல் ஜோதியே
காலை விடிவெள்ளி-சிலுவை
சரணம்-3
தேவ ஆட்டுக்குட்டியே
தாரும் குருசின் காட்சி
அதன் நிழலிலென்றும்
செல்ல துணை செய்யும்-சிலுவை
சரணம்-4
காத்திருப்பேன் குருசண்டை
நம்பி நிலைத்தென்றும்
நதிக்கப்பால் பொன்கரை
நான் சேர்ந்திடும் மட்டும்-சிலுவை
Jesus Thy Fullness Give ESB # 431
In Tamil:தாரும் தேவா உந்தன்
சரணம்-1
தாரும் தேவா
உந்தன் பூரண இரட்சிப்பு
காரும் என் ஆத்ம தேகமும்
மாறாது சுத்தமாய்
பல்லவி
தூய ஆடை
நான் தரித்து
நேயரோடுலாவுதற்கு
ஆக்குதவர் இரத்தம்
சரணம்-2
பூரண இரட்சிப்பின்
தீரம் எனக்கிலும்
தீங்ககற்றி நன்மை செய்ய
தாங்கிடும் வல்லவா-தூய
சரணம்-3
அன்பு சமாதானம்
உன்னத ஆறுதல்
கல்வாரி ஜீவன் ஆவியும்
என் பங்காகச் செய்யும்-தூய
சரணம்-4
முற்றாய் பாவம் விட்டு
வற்றா க்ருபைக் கொண்டு
புறம் அகம் யாவும் உம்மைப்போல்
கறை அற்றிருப்பேன்-தூய